டி.ராஜேந்தர் அவர்களின் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியது நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமா பிரபலம் டி.ராஜேந்தர் அவர்களின் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்க்கு மாறினார் என்று ஒரு வீடியோ பரவியது. அதே சமயம் அவரை பற்றி சில வதந்தியும் பரவி வருகின்றது.
வதந்தி 1
குறளரசன் இஸ்லாம் மதம் மாறவில்லை அவர் சென்னை மவுண்ரோடு தர்க்காவில் வேண்டுதல் நேர்ச்சை செய்ய வந்தார் என்றும்
வதந்தி 2
அவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார் அவருக்காக இஸ்லாம் மதம் மாறினார் என்றும் ஒரு வதந்தி பரவிவருகின்றது.
ஆனால் உண்மை என்ன?
குறளரசன் அவர்களுக்கு சிறு வயது முதலே இஸ்லாம் மீது அவருக்கு ஆர்வம்.மேலும் அவருக்கு அவருடைய இஸ்லாமிய நண்பர்களின் பழக்கவழக்கம் இறைவழிபாடு இதனை கண்டு ஆச்சரியத்தோடு விளக்கம் கேட்பாரம் அவரது இஸ்லாமிய நண்பர்கள் மூலம் தாவா கொடுக்கபட்டு அவர் இஸ்லாம் மார்க்கத்திற்க்கு வந்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் 15 ம் தேதி மகரிப் தொழுகைக்கு பிறகு சுமார் 7 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா பள்ளி இமாம் முன்னிலையில் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதர் ரசுலுல்லாஹ் என்ற மார்க்க கலிமா சொல்லி இஸ்லாம் மார்க்கத்திற்கு வந்துள்ளார்.
ஆனால் இஸ்லாம் மீது வெறுப்புள்ள சில பரபரப்பு மீடியாக்கள் குறளரசன் இஸ்லாம் மார்க்கத்திற்க்கு வரவில்லை என்றும் காதலுக்கா வந்துள்ளார் என்றும் வதந்தி பரப்புகின்றார்கள்
குறளரசன் உள்ளத்தை அல்லாஹ் அறிவான்