போக்குவரத்து விதிமீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்



தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதி மீறல்களும், சாலை ஆக்கிரமிப்புகளும் ஆங்காங்கே நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர் விதிமீறல்களால் வாகன ஓட்டிகள் உட்பட பலருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.

இதற்கு தீர்வு காணும் வகையில் புகார் தெரிவிக்க செல்போன் எண்ணை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார். அதில், ‘‘போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க ஏதுவாக தமிழக காவல்துறை சார்பாக 94981 81457 என்ற தொலைபேசி எண் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment