பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்: 110 கிலோ மீட்டர் வேகம்



பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அகல ரயில் பாதையில் 110 கிலோ மீட்டர்  வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. சரியாக ஒரு மணி  நேரத்தில் ரயில் சென்றடைந்தது.

காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைதொடர்ந்து முதல்கட்டமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ தூரம் அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கி.மீ தூரம் உள்ள அகல ரயில் பாதையில் கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை 3 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது. அதிவேக ரயிலுக்கு பாரம்பரிய முறைப்படி தேங்காய் உடைத்து புனிதநீர் ஊற்றி,தீபம் காட்டி பூசணிக்காய் சுற்றி உடைக்கப்பட்டது. மேலும் ரயில் சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம்பழம் வைத்து பச்சைக்கொடி காண்பித்து ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த அதிவேக சோதனை ரயிலில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி, முதன்மை நிர்வாக அலுவலர் சுதாகர்ராவ், முதன்மை பொறியாளர் இளம்பூரணம் மற்றும் ரயில்வேதுறை அதிகாரிகள் சென்றனர். பட்டுக்கோட்டையில் 10.30 மணிக்கு துவங்கி 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூருக்கு காலை 11.30 மணிக்கு சென்றடைந்தது. இந்த அதிவேக ரயில் பட்டுக்கோட்டையில் புறப்பட்டு திருவாரூர் வரை எங்குமே நிற்காமல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சரியாக ஒரு மணி நேரத்துக்குள் சென்றதாக ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக ரயில்வேத்துறை உயரதிகாரிகள் அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிவேக ரயிலுக்கு வரவேற்பு தெரிவித்து பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிகாரிகள், பொதுமக்களுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கினர். பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பொதுமக்கள் நின்று அதிவேக ரயிலுக்கு கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ேமலும் அதிவேக ரயிலுக்கு முன் நின்று ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டனர்.

சான்றிதழ் வழங்கப்படும்

தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை கடந்த 3 நாட்களாக பட்டுக்கோட்டையிலிருந்து  திருவாரூர் வரை அகல ரயில்பாதை பணிகளை ஆய்வு செய்துள்ளோம்.

Post a Comment

0 Comments