எத்தியோப்பியாவில் விமான விபத்து 157 பேர் பலி



எத்தியோபியாவில் இருந்து 157 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துகுள்ளானதில் பயணிகள் உள்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். 

எத்தியோபிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 மேக்ஸ் ரக விமானம் இன்று காலை கென்ய தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்டது. ET 302 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணிக்குழுவினரும் இருந்தனர். இந்நிலையில் புறப்பட்ட 6 நிமிடங்களுக்குள்ளாகவே அதாவது அந்நாட்டு நேரப்பட்டி காலை 8 மணி 44 நிமிடங்களுக்கு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.



அந்த விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்ததாக எத்தியோப்பிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், விமானத்தில் பயணித்த 149 பயணிகள் உள்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். 


இதற்கிடையே, எத்தியோபியா பிரதமர் அபிய் அஹ்மத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அந்நாட்டு மக்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் இரங்கல் தெரிவிப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments