புதுக்கோட்டை மருத்துவக் கண்காட்சியை மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்



மருத்துவம் குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது. இந்த மருத்துவக் கண்காட்சியானது பிப்ரவரி -27-லில் தொடங்கி மார்ச் 8-ம் தேதியுடன் முடிவடைந்தது.

மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி மீது அறிவையும் , ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிடும் காட்சி:




பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தினை மேம்படுத்தும் விதமாக இ .ஐ .டி பாரி சர்க்கரை ஆலைக்கு அறிவியல் களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டு சர்க்கரை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் காணும்வாய்ப்பை பெற்றனர். மேலும் கரும்பிலிருந்து சர்க்கரை எவ்வாறு தயாராகிறது என்பதினை செயல்விளக்கத்துடன் விளக்கிய இ .ஐ .டி பாரி சர்க்கரை ஆலையின் மனிதவள மேலாளர் திரு. லட்சுமணன் அவர்களுக்கும் ஆலை நிர்வாகத்திற்கும் எம் பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.




தகவல்: வாசிம் கான்

Post a Comment

0 Comments