புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 60,000 மதிப்பில் ஊர் ஜமாத் மற்றும் வளர்பிறை நற்பணி மன்றத்தின் சார்பாக கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி (07/03/2019 வியாழக்கிழமை) நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஜமாத்தார்கள் தலைமை தாங்க, அரசை வளர்பிறை நற்பணி மன்றத்தார்கள் முன்னிலை வகித்தனர் .
திருமதி.ஜோ.லதா பேபி, M.A,M.ED., M.B.L, அவர்கள் வட்டார கல்வி அலுவலர், ஆவுடையார்கோவில். திரு.நா. சண்முகநாதன் அவர்கள் M.A, M.ED M.Phil, மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆசிரியர் மன்றம், திருமதி.வி.அனிதா M.Sc,B.ED, M.Phil அவர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆவுடையார்கோவில், திரு.செ.நல்ல முகம்மது,M.A.,B.ED.,M.Phil அவர்கள் தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பரமந்தூர் (ஒன்றியச் செயலாளர், ஆசிரியர் மன்றம்). திரு.த.முத்துராமன்,M.A,B.Ed அவர்கள் ஆசிரியர் பயிற்றுநர், ஆவுடையார்கோவில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், மாணவ மாணவிகள் நன்றாக படித்து ஊருக்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதி மொழியுடன் வகுப்புகளுக்கு சென்றார்கள்.இவ்விழாவை பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ராமசாமி மற்றும் சக ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக ஆசிக் இக்பால்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.