மனிதநேய பணியில் தமுமுக!! சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு



சவுதி அரேபியா தமாம் துக்பா பகுதியில் இறந்த சேகர் உடலை தாயகம் அனுப்பிய ரியாத் தமுமுக. 

தமிழகத்தை சேர்ந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா நெட்குப்பை கிராமம் கருப்பர் கோயில் ராமையா அவர்களின் மகன் சேகர் அவர்கள் சவுதி அரேபியா - தமாம் துக்பாவில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். கஃபீலுடன் ஏற்பட்ட பிரச்சினையில் அவரிடமிருந்து வெளியேறி வெளியில் அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அறையிலேயே உயிரிழந்தார். 

இந்த செய்தி அறிந்ததும் அவரது உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்த நிலையில் அவரது மனைவி சுப்புலட்சுமி தொலைப்பேசி வாயிலாக ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல்ஹமீது அவர்களுக்கு தகவல் தந்து எப்படியாவது உடலை பெற்றுத்தர கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களின் வழிகாட்டுதலில் ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்கள் சேகர் வேலை செய்த முதலாளியிடம் தொடர்பு கொண்டு விசாரிக்கும்போது ஏற்கனவே போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்ததின்  (குர்ஃப்) அடிப்படையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தூதரக ஒத்துழைப்புடன்  அவரது உடலைப் பெற்று திருச்சி விமான நிலையம் அனுப்பப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேகர் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும்இன்றி உரிய நேரத்தில் எனது கணவரின் உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு சேகரின் மனைவி சுப்புலட்சுமி கண்ணீர்  மல்க நன்றி கூறினார்.

தகவல்:
தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவுதி அரேபியா

Post a Comment

0 Comments