மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், புகார்களின் பேரிலான ஆய்வுகள் ஆகியவற்றின் வீடியோ காட்சியை தேவைப்படுவோர் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 18 வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. நேர்மையான நியாயமான வாக்குப்பதிவுக்காக பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் புகாரின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் ஆகியவற்றை இந்தக் குழுவிலுள்ள ஒளிப்பதிவாளர் விடியோ பதிவு செய்வார்.
கண்காணிப்பும் நேர்மையாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் விடியோ காட்சிகளை பொதுமக்களும் கூட குறுந்தகடாக வாங்கிப் பார்க்கலாம்.
குறிப்பிட்ட ஒளிப்பதிவை பார்க்க விரும்புவோர், குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதி பெயர், நாள், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரை நேரில் சந்தித்து ஒரு குறுந்தகட்டுக்கு ரூ. 300 கட்டணமாகச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.