தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் விளம்பர பேனர்கள் வைக்க தடை ; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி



தமிழகம் முழுவதும் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேர்தல் தொடர்பாக விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை அதிகளவில் அரசில் கட்சியினர் பொதுமக்களை கூட்டாக அழைத்துச் செல்லவும், ஒரே சமயத்தில் வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வரவும் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் - சுந்தர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவுகளை பிறிப்பித்துள்ளது.  இவ்வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க கோரி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments