புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுபெறும்வரை அரசு சார்ந்த கூட்டங்கள் நடைபெறாது



புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்கள் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுபெறும்வரை நடைபெறாது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொது தேர்தல் 2019 அட்டவணை 10.03.2019 அன்று வெளியிடப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் 10.03.2019 முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மனுநீதிநாள் கூட்டம் மற்றும் அம்மா திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுபெறும்வரை நடைபெறாது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments