பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர் போட்டி



உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்புக்குழுமமான பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழு, வெள்ளிக்கிழமை மார்ச் 8ம் தேதி, இந்தியன் கிளப் வளாகத்தில் அமைந்துள்ள ஔவையார் கல்விக்கூடத்தில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பஹ்ரைன் வாழ் தமிழ் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முதல் போட்டியை குழுவின் ஆதரவாளர்களான சுபியா இணையதுல்லா மற்றும் கலைவாணி விவேகானந்தன் தொடங்கிவைத்தனர்.



பல சுற்றுக்களாக நடைபெற்ற தொடர்போட்டியில் முதல் பரிசை சாந்தி ஜெயராம், இரண்டாம் பரிசை ப்ரியா மோகன் மற்றும் மூன்றாம் பரிசை பிருந்தா செந்தில்குமார் ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றது. மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் “தமிழர் பண்பாட்டில் பல்லாங்குழி ஆட்டம் என்பது பெண்களின் கணித திறமையை வளர்பதற்கும் நினைவாற்றலை மேன்படுத்துவதர்க்கும் பயன்படுவதோடு ஒரு இடத்திலிருக்கும் குவிந்திருக்கும் செல்வதை எடுத்து அனைவருக்கும் பகிர்தளித்தல் என்ற கோட்பாடையும் வலியுறுத்துகிறது. அனைத்து தொன்மையான கலாச்சாரங்களில் இதை பற்றிய தகவல்கள் உள்ளது, குறிப்பாக எகிப்து பிரமிடுகளின் பல்லாங்குழியின் படங்கள் வரையப்பட்டுள்ளன” என்று கூறினார்.

பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் பேசும்போது “நமது தமிழ் பெண்கள் மறந்த மறந்துகொண்டிருகின்ற பல கலாசார விளையாட்டுக்கள் நமது குழுவின் மூலம் மீட்டுக்க தொடர்ந்து பல நிகழ்சிகளை முன்னெடுப்போம்” என்று கூறினார். அரபு நாடுகளிலேயே பல்லாங்குழி தொடர்பான முதல் நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments