புதுக்கோட்டையில் நள்ளிரவில் துணிகரம்: சைடு லாக்கை உடைத்து பைக் திருட்டு! வாலிபர் சிசிடிவி கேமராவில் பதிவு!



புதுக்கோட்டை நகரில் நள்ளிரவில் பல்சர் வாகனத்தின் சைடுலாக்கை உடைத்து வண்டியைத் திருடிச் செல்லும் சிசிடிவி பதிவுடன் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் மகன் பிரகாஷ். புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது பல்சர் இருசக்கர வாகனத்தை வழக்கம்போல அலுவலக வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இதையடுத்து அதே பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் பார்க்கப்பட்டன.

ஒரு சிசிடிவி பதிவில், நள்ளிரவில் அந்த பல்சர் வாகனத்தின் அருகே நின்று கொண்டு சைடு லாக்கை காலால் உதைத்து உடைத்து, வண்டியைத் திருடிச் செல்லும் காட்சி இருந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளுடன் நகரக் காவல் நிலையத்துகு வியாழக்கிழமை சென்ற பிரகாஷ் புகார் அளித்தார்.

Post a Comment

0 Comments