ஆவுடையார்கோவில் அஞ்சலகத்தில் "மை ஸ்டாம்ப்' மையம் திறப்பு



புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவில் தலைமை அஞ்சலகத்தில்  "மை ஸ்டாம்ப்' மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

புதுக்கோட்டையை அடுத்து  இரண்டாவதாக இங்கு தொடங்கப்பட்ட மையத்தை தொடங்கிவைத்து  புதுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் சி. சுவாதி மதுரிமா பேசியது: 

இந்த மையத்தில் யார் வேண்டுமானாலும் ரூ. 300 செலுத்தி தங்களது படத்தையோ அல்லது குழந்தைகள் மற்றும் தலைவர்கள் படம் உள்ளிட்டவற்றை இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலம் ஸ்டாம்புகளாக உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.இவற்றை தபால் போக்குவரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் வில்லைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அஞ்சல ஆய்வாளர் எம். கார்த்திக், அஞ்சல் அலுவலர் ஜி. ராதை  ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments