கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசலில் இன்று மழை வேண்டி துஆ (பிரார்த்தனை) செய்ய ஏற்பாடு



தமிழகம் வறட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களும், ஏனைய ஜீவராசிகளும் தண்ணீரைப் பெற்றுக்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலை தோன்றியுள்ளது.

இது போன்ற சந்தர்பங்களில் நாம் அல்லாஹ்விடம் மன்றாடி அவனுடைய அருளைக் கேட்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து அருள் புரியும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.

அசாதாரண நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் நமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மீள் பரிசீலனை செய்து திருத்திக் கொள்வதும் அதிகமாக இஸ்திஃபார் செய்வதும் நபி வழியாகும். இதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் இறங்கலாம்.

மேலும் நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்திற்கு செய்த உபதேசத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

‘உங்கள் இரட்சகனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்’ என்றும் கூறினேன். (அவ்வாறு செய்வீர்களாயின் தடைபட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான். மேலும் பொருட்களையும் மக்களையும் கொடுத்து உங்களுக்கு உதவி புரிவான். உங்களுக்கு தோட்டங்களையும் உற்பத்தி செய்து அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்’. (நூஹ்: 10–12)

எனவே தண்ணீர் நமக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். அது இல்லாமல் போவதால் அல்லது குறைந்து விடுவதால் மக்கள் படும் வேதனையை நாம் அறிவோம். 

அதன் அடிப்படையில்  கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசலில் இன்ஷா அல்லாஹ் இன்று (29-03-2019) ஜூம்ஆ தொழுகை முடிந்து வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி துஆ (பிரார்த்தனை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே நடக்கவிருக்கும் இந்த சிறப்பான நிகழ்வில் கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை வேண்டுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைவரையும் அன்போடு அழைப்பது
முஸ்லீம் ஜமாத் நிர்வாகம் (வக்ஃபு)
கோட்டைப்பட்டினம்

தகவல்:
உற்று நோக்கு செய்தி தளம்…
கோட்டைப்பட்டினம்

Post a Comment

0 Comments