தம்மாம் மாநகரில் நடைபெற்ற உளவியல் வசந்த விழா!



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சவுதி கிழக்கு மண்டல நிர்வாகம் மற்றும்  தம்மாம் கிளை  இணைந்து  நடத்திய உளவியல் வசந்த விழா (உணர்வாய் உன்னை) நிகழ்ச்சி   மூன்று அமர்வுகளை கொண்டு (29/3/2019) அன்று சிறப்பாக நடந்து முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியை மண்டல மனிதவள மேம்பாட்டு அணியின் செயலாளர் சகோ. திருவாரூர் அப்துல் முஃமின் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

தம்மாம் மாநகர கிளையின் பொருளாளர் சகோ. வந்தவாசி முகம்மது பிலால் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியை மண்டலத் தலைவர் சகோ. திருவாரூர் அப்துல் அலீம் தலைமை உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.

தாயகத்திலிருந்து வந்திருந்த மாநில விழி அமைப்பின் செயலாளரும் உளவியல் ஆலோசகருமான  சகோதரர் முனைவர் மு. ஹுசைன் பாஷா அவர்கள், நடைமுறை வாழ்க்கை, குடும்ப உறவுகள், சமூகவியல் மற்றும் குர்ஆன் ஹதீஸ் பின்னனியில் சிறப்பான  உளவியல் பயிற்சி அளித்தார்.

ஜும்மா சிறப்புரையை மண்டல கௌரவ ஆலோசகர் மௌலவி ஜக்கரியா அவர்கள் வழங்கினார்.

பணிஓய்வில் தாயகம் திரும்ப இருக்கும் மண்டலப் பொருளாளர் சகோ. நஸ்ருத்தீன் ஸாலிஹ் தமது நீண்டகால தஃவா மற்றும் தமுமுக பணிகளில் தம்மோடு பயணித்த அனைவரையும் தனது சிற்றுரையில் நினைவுகூர்ந்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ரியாத் மத்திய மண்டல தமுமுக/மமக தலைவர் சகோ.மீமிசல் நூர் முகம்மது அவர்கள் தமுமுக-வின் தனித்தன்மைமிக்க சமூகப்பணிகள் மற்றும்  மமக வின் சமயோஜிதமான இன்றைய அரசியல் நகர்வு என்பவை உள்ளிட்ட  கருத்துக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக  மண்டலத் துணைத் தலைவர் மெளலவி காயல் இஸ்மாயில்  அவர்கள் நிகழ்ச்சியின் சிறப்பம்சம் மற்றும் நோக்கத்தை அடைவது பற்றி சுருக்கமாக எடுத்துரைத்து, வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.





இந்த சிறப்பு நிகழ்வில் கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட தமுமுக சகோதரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும்  குடும்பத்துடன் வந்து ஆர்வமுடன் கலந்து  கொண்டார்கள்.

சவுதி கிழக்கு மண்டல  நிர்வாகிகளுடன் தம்மாம் மாநகரக் கிளையின்  நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க  குழந்தைகளுக்கு குதூகலம் அளிக்கும் வகையில் தம்மாம் கிளையின் துணைச் செயலாளர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

தகவல் :
தமுமுக ஊடகப்பிரிவு,
தம்மாம் மாநகரம் / சவுதி கிழக்கு மண்டலம்

Post a Comment

0 Comments