கோபாலப்பட்டினம் ஆரம்பம் முதல் ஒரே ஜமாஅத் தலைவர் என்ற நிலை தொடர்கிறது. 4 திசைகளில் 4 பள்ளிவாசல்கள் இருந்தும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ஒரு பள்ளிவாசலில் மட்டுமே நடைபெறுகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே. ஆனால் கடந்த ஆண்டு 08/11/2018 அன்று நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு நிலவியதால் இரண்டாவது தலைமைக் கொண்டு இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை என்று புதிய நிர்வாகத்தை தேர்வு செய்து மொத்தம் இரண்டு ஜமாஅத்தாக பிளவு ஏற்பட்டு கடந்த நான்கு மாதங்களாக தனித்தனியாக செயல்பட்டு வந்தது. இந்த செயல் ஊர் மக்கள் அனைவருக்கும் பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியது.
அதன் அடிப்படையில் ஊரில் உள்ள சில நல்லுள்ளங்கள் இரண்டு ஜாமத்தையும் ஒன்றிணைக்கும் பணியை கடந்த 15/03/2019 வெள்ளிக்கிழமை மற்றும் 16/03/2019 சனிக்கிழமை இரண்டு நாட்களாக நடைபெற்ற வாத-விவாத கருத்துபறிமாற்றல்களுக்கு பிறகு இரு தரப்பு ஜமாத்தும் இணைந்து ஒரே ஜமாத்தாக செயல்படுவது என்று அறிவிக்கப்பட்டது. (அல்லாஹ்வே மிகப்பெரியவன், அல்ஹம்துலில்லாஹ்). இரு துருவங்களாக செயல்பட்டுவந்த "ஜமாத்"கள் இணைந்தது ஊர் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

தீர்மானங்கள்:
1. மதரஸா ஆண்டு விழா, மெஹ்ராஜ் உணவு வழங்குதல், சின்னப்பள்ளிவாசல் உணவு வழங்குதல், நோன்பு கஞ்சி வழங்குதல், போன்றவற்றை செயல்படுத்த பத்துபேர்க் கொண்ட மதரஸாக் குழுவிடம் ஒப்படைப்பது.
2. ASM.செய்யது முஹம்மது அவர்களின் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து செயல்படும்.
3. ASM.செய்யது முஹம்மது அவர்களின் தலைமையிலான நிர்வாகம் வருகின்ற 21/06/2019 (வெள்ளிக்கிழமை) அன்று ராஜினமா செய்துவிடுவது எனவும் அதை தொடர்ந்து 28/06/2019 (வெள்ளிக்கிழமை) அன்று ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி ஒன்றுபட்ட புதிய நிர்வாகம் தேர்ந்துதெடுக்கப்படும் என்றும் ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
1 Comments
மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.