ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை மக்களின் ஒன்று கூடல் விழா



இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் (PIA) ரியாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்திராஹா மகிழக நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 15/03/2019 அன்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

வரவேற்புரைக்குப் பின்னர், குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது.

வெள்ளி சிறப்புத் தொழுகையில் உரையாற்றிய கு.நிஜாமுதீன் மிஃராஜ் இரவு பற்றி தர்க்க ரீதியாக விளக்கினார். மேலும் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா திட்டங்கள் எதிர்க்கப்பட வேண்டியதன் தேவையையும் பொள்ளாட்சிக் கொடூரங்கள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றியும் சிறப்பாகப் பேசினார்.

கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தங்களின் ஆதங்கத்தையும் முழக்கங்களையும் ஒரு காணொளியில் பதிவு செய்தனர். ஜும்மா தொழுகைக்கு பிறகு மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை சேர்ந்த ரியாத் வாழ் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் எல்லாம் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மெளலவி நூஹ் அல்தாஃபி சொந்தபந்தம் பேணுவது சொர்க்கத்திற்கு வழி என்ற தலைப்பில் மிகவும் அற்புதமான உரை நிகழ்த்தினார்.

இறுதியில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துஆ ஓதி கூட்டம் முடிவுப்பெற்றது.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் செயற் குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments