புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ரெட்டையாளம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பல வருடங்களாக சாலை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பில், தார்சாலை இப்பகுதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் இந்த சாலையை ஒப்பந்தம் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சாலை போடும் பணிகள் ஒரு மாதம் மட்டுமே நடைபெற்றது. பின்னர் வேலை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் கரடு முரடாக இருக்கும் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்து இருந்தோம். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்தபகுதி கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர். பின்னர் இந்த அறிவிப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக அப்பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என்ற விளம்பர பதாகையையும் கிராமமக்கள் வைத்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.