மீண்டும் மறு தொகுதி சீரமைப்பு வரும் போது தான் புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுக்க முடியும் என திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சி பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் . பொது மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார். மேலும் பாரம்பரியம் மிக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ஆணையத்தால் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டது அதை மீட்பதற்கு என்னாலான முயற்சிகளை கடந்தகாலங்களில் நான் மேற்கொண்டேன். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் அந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாடினேன் ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. மீண்டும் மறு தொகுதி சீரமைப்பு வரும்போதுதான் புதுக்கோட்டைதொகுதியை மீட்டெடுக்க முடியும் எனவே புதுக்கோட்டையில் நோட்டாவிற்கு வாக்களிப்பவர்கள் இதனை சிந்திக்க வேண்டும் நோட்டாவிற்கு வாக்களித்தால் எந்த பயனும் இல்லை மேலும் ஒரு சதவீதம் அல்லது 2% வேண்டுமானால் நோட்டாவிற்கு பொதுமக்கள் வாக்களிக்கலாம் அது என்னுடைய வெற்றி வாய்ப்பை பாதிக்காது .
சட்டசபையில் விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதாவிற்கு இடையே நடந்த மோதலுக்கு திமுகதான் காரணம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறிவருவது விஜயகாந்தை இழிவுபடுத்தும் செயலைதான் பார்க்க முடியும். இதுபோன்ற விமர்சனங்களை பிரேமலதா விஜயகாந்த் வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் அகில இந்திய தலைவராக உள்ள சுதர்சன நாச்சியப்பன் கட்சித்தலைமை முடிவை ஏற்று கார்த்தி சிதம்பரத்திற்கு தேர்தல் பணிஆற்ற வேண்டும். இனி இதுபோன்ற கட்சிக்கு எதிராக பேசும்முடிவை அவர் கைவிட வேண்டும்.சுயேட்சை வேட்பாளர் கூட எனக்கு போட்டியாளராக தான் நான்கருதுகிறேன் 7 பேர் விடுதலை என்பது சட்ட ரீதியாக நடக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி மட்டுமல்ல அவரோடு பல பேர் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டும் 7 பேர்விடுதலை குறித்து சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும். என்றார்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.