கட்டுமாவடி அரசுப் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜன.24) "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்!



தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஜனவரி 24, சனிக்கிழமை) மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

வழங்கப்படும் 17 வகை சிறப்பு சிகிச்சைகள்:

​இந்த முகாமில் அனுபவம் வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பின்வரும் சிகிச்சைகளை வழங்கவுள்ளனர்:

​பொது மருத்துவம்
​அறுவை சிகிச்சை மருத்துவம்
​எலும்பு முறிவு மருத்துவம்
​மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம்
​குழந்தை நல மருத்துவம்
​இதய நல மருத்துவம்
​நரம்பியல் மருத்துவம்
​தோல் சிகிச்சை மருத்துவம்
​பல் சிகிச்சை மருத்துவம்
​கண் மருத்துவம்
​காது, மூக்கு, தொண்டை மருத்துவம்
​மனநல மருத்துவம்
​மூட்டுநீக்கியல் மருத்துவம்
​நுண்கதிர் மருத்துவம் (X-Ray/Scan)
​நுரையீரல் சிகிச்சை மருத்துவம்
​சர்க்கரை நோய் மருத்துவம்
​சித்த மருத்துவம்

​இலவச பரிசோதனைகள்: இசிஜி (ECG), இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சுமார் 3000 ரூபாய் மதிப்புள்ள அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

​பரிசோதனை முடிவுகள்: இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரகச் செயல்பாடு உள்ளிட்ட பரிசோதனை விவரங்கள் நோயாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

​காப்பீட்டுத் திட்டம்: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய பயனாளிகள் சேருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

​மாற்றுத்திறனாளிகள் சேவை: மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளும் இம்முகாமிலேயே நடைபெறும்.

​பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
​இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை (Xerox) கண்டிப்பாகக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இப்பகுதி பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து நலம் பெற மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments