நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகரித்து உள்ள பகுதியாக கோட்டைப்பட்டினம் மற்றும் தொண்டி கண்டறியப்பட்டுள்ளது.



நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள 463 இடங்கள் அபாயகரமான பகுதியாக மாறியிருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் பயன்பாடு அதிகரித்து விட்டது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் வரை சென்று விட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் அபாயகரமான பகுதியாக மாறியிருப்பது பொதுப்பணித்துறை சார்பில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் 358 மிகவும் அபாயகரமானபகுதியாகவும், 105 அபாயகரமான பகுதியாகவும், 212 அபாயகரமான பகுதியாகவும் மாறி வருவதாகவும், 429 பகுதி பாதுகாப்பானதாகவும், 35 பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத்தன்மை நீர் உள்ள பகுதிகளாக மாறி உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகரித்து உள்ள இடங்கள்: 

35 இடங்கள் உப்புத்தன்மையாக மாறியது
* ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோட்டைப்பட்டினம், தொண்டி, மிஞ்சூர், முதுகுளத்தூர் தெற்கு, கடலாடி, சாயல்குடி, திருப்புல்லானி, வேதாரண்யம், திருக்குவளை, நாகை, வேளாங்கண்ணி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 35 இடங்களில் நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகரித்து இருப்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2017ல் 284 அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, 463 மாறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபாயகரமான பகுதிகள்: 

அதன்படி சென்னை மாவட்டத்தில், எழும்பூர், நுங்கம்பாக்கம், தண்டையார் பேட்டை, மாம்பலம், கிண்டி, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், மயிலாப்பூர், கோவை மாவட்டத்தில், அன்னூர், பெரிய நாயக்கன் பாளையம், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சூலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கடலூர் மாவட்டத்தில் கடலூர், திருவந்திப்புரம், விருத்தாச்சாலம், தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, கடத்தூர், தேன்கரைக்கோட்டை, பாப்பாரப்பட்டி, பெண்ணாகரம், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் தெற்கு, நிலக்கோட்டை, வேடசந்தூர் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வடக்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோயில், வாலாஜாபாத், திருக்கழுக்குன்றம், அரும்புலியூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், வேப்பணபள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, பாபநாசம், பட்டுக்கோட்டை, வல்லம், தஞ்சாவூர், திருவையாறு, சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, சேலம் டவுன், வீரபாண்டி, சங்ககிரி, வாழப்பாடி, திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, ஆர்கேபேட்டை, திருநின்றவூர், ஊத்துக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், கொரடாச்சேரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வலங்கைமான், தூத்துக்குடி மாவட்டத்தில் இளையரசனேந்தல், உடன்குடி, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், தொட்டியம் நெல்லை மவாட்டத்தில், கரிவலந்தம்நல்லூர், குருக்கள்பட்டி, சங்கரன் கோயில், சேர்ந்த மங்கலம், திருவேங்கடம், சுரண்டை, ஊத்துமலை, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், பல்லடம், திருப்பூர்தெற்கு, திருப்பூர் வடக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம், செய்யாறு, கீழ் பென்னாத்தூர், தண்டாரம்பட்டு, வந்தவாசி, ஆற்காடு, வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, ஜோலார்பேட்டை, வானியம்பாடி ஆம்பூர், அணைக்கட்டு, வடவேலூர், பள்ளி கொண்டா, சத்துவாச்சாரி, பெண்ணாத்தூர், சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், உளுந்தூர் பேட்டை, விக்கிரவாண்டி, விழுப்புரம் உட்பட 463 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments