கோட்டைப்பட்டினம் பொது மக்களுக்கு: காவல்துறை எச்சரிக்கை!



கோட்டைப்பட்டினம் வாழ் பொது மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் காவல்துறையினரின் ஓர் முக்கியமான எச்சரிக்கை பதிவு.

கோட்டைப்பட்டினம் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான திருட்டு சம்பவங்களும், இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்துக் கொண்டிருக்கும் காரணத்தினால், தங்களுடைய சொந்த இரு சக்கர வாகனங்களாக இருப்பினும் அதனை பொது இடங்களில் அதிக நேரம் நிறுத்தி வைப்பதையும், கண்ட நேரங்களில்  (குறிப்பாக இரவு நேரங்களில்) தகுந்த காரணமின்றி ஊரை சுற்றி திரிவதையும் தயவு செய்து முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளவும். திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருப்பதால் சந்தேகத்தின் பெயரால் உங்களுடைய சொந்த வாகனங்களாக இருப்பினும் அதனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்க்கு கொண்டு செல்லப்படும் என்பதையும் இதன் மூலம் அறியத்தருகிறோம். அதன்பின் நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்த பிறகே வாகனத்தை நீங்கள் பெற முடியும். எனவே தேவையில்லாத அலைக்கழிப்பு நிலை உங்களுக்கு உருவாகக்கூடும்.

ஆகையால் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து இவ்வெச்சரிக்கையின் படி தங்களுடைய செயல்பாட்டினை அமைத்துக்கொள்ளுமாறு உங்களை அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அது மட்டுமல்லாது காவல்துறையினரின் மற்றுமொரு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய எச்சரிக்கை என்னவெனில் இரவு 10 மணிக்கு மேல் கோட்டைப்பட்டினம் ஊரக விளையாட்டு மைதானத்திற்க்குள் உலா வருவதையும், அதனை உபயோகப்படுத்துவதையும் கூட முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளவும். ஏனெனில் ஒரு சில தீய பழக்க, வழக்கமுடைய நபர்களால் மைதானத்திற்க்குள் கஞ்சா, அபீன், மது போன்ற சமூக சீர் கேட்டு செயல்களும் கையாடப்படுகிறது. அத்தகைய தீய செயல்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே குறிப்பாக இரவு 10 அல்லது 11 மணிக்கு மேலாகவே செய்கின்றனர். இதனால் அந்நேரங்களை கடந்து மைதானத்திற்க்குள் இருக்கக்கூடிய அச்செயல்களுக்கு சம்பந்தமில்லாத மற்ற நபர்களையும் சந்தேகத்தின் பெயரால் கைது நடவடிக்கை எடுக்கும் படியாகவும் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவேதான் இதனை நன்கு அழுத்தத்தோடு, அறிவுறுத்தி சொல்லப்படுகிறது. 

தயவு செய்து மேலே குறிப்பிட்டிருப்பது போன்று தங்களுடைய நடவடிக்கையில் காண்பித்து காவல்துறையினருக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு ஊர் இளைஞர்களையும், பொது மக்களையும் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

இவன்
ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி, 
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு) நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்,

தகவல்:
உற்று நோக்கு செய்திகள்…
கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்... 

Post a Comment

0 Comments