மனித நேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கி VKS திருமண மண்டபத்தில் நேற்று (11-03-19) நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் தலைமை தாங்கினார். மாநில இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய் மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முகம்மது ஹாரிஸ் மற்றும் மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒளி முகம்மது, சைய்யது அபுதாஹிர், இஸ்லாமிய கலாச்சார பேரவை IKP மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) மாவட்ட செயலாளர் ஷாஜிதீன், மனிதநேய ஜனநாயக வர்த்தக சங்க MJVS மாவட்ட செயலாளர் ஒக்கூர் மு.க.முஜி, மீனவர்கள் சங்க மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் பரக்கத் கனி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹமது, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீன, சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மகளிர் அணி மாவட்ட செயலாளர் ரஹ்மத் நிஷா, மகளிர் அணி மாவட்ட பொருளாளர் சுமையா பேகம், மனிதநேய ஜனநாயக வர்த்தக சங்க MJVS மாவட்ட பொருளாளர் அபுதாலீப், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் ராஃபியா ராணி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் செல்லஅத்தா என்ற முகம்மது மைதீன், கோட்டைப்பட்டினம் நகர செயலாளர் ரஸ்தாளி என்ற சாலிஹ், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் செய்யது, அரிமளம் ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லாஹ், கீரமங்களம் ஒன்றிய செயலாளர் புர்ஹானுதீன், அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் அப்துல் ரஜாக்,அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், மணமேல்குடி ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி, ஆவுடையார்கோவில் ஒன்றிய பொருளாளர் முகம்மது குஞ்சாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜ்மீர் அலி, அபுபக்கர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தீர்மானங்கள்:
1.மனிதநேய ஜனநாயக கட்சி நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மரம் நடுதல் தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற சமூக சேவைகள் அனைத்து கிளைகளிலும் செய்யவேண்டும்
2. நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற ஆட்சி அமைந்திட தமிழகத்திலே காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற கூட்டனி வெற்றி பெறச் செய்வது.
ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK IT WING
மஜக புதுக்கோட்டை கிழக்கு
பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது முகநூல் பக்கத்தை லைக் (Like) செய்து கொள்ளுங்கள்
Facebook Like:
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.