உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியின் மூலம் பல்வேறு ஆபத்தான ஃபார்வர்டு மெசேஜ்கள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் பிரபல வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கி, நடத்தி வருகிறது.
இந்த வாட்ஸ்அப் மொபைல் ஆப்பின் மூலம், பொதுமக்கள் குறுஞ்செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள், வீடியோ கால் உள்ளிட்டவை மட்டுமல்லாது, அதிக அளவில் செய்திகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
போலி செய்திகள் மூலம், பல தவறான தகவல்கள் பொது மக்களிடையே பரவி வருவது ஒரு பக்கம் இருக்க, ஆபத்தான லிங்குகளை பகிர்ந்து, அதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவது இன்னொரு ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.
பல்வேறு கவர்ச்சியான மெசேஜ்கள் மூலம் நமது ஆர்வத்தை தூண்டி, மொபைல் தகவல்களை திருட முயற்சிக்கின்றனர்.
இதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்:
அடிடாஸ், நைக்கி போன்ற பிரபல ஷூ நிறுவனங்களில் இருந்து, இலவசமாக ஷூ தருவதாக ஒரு சில மெசேஜ்கள் வலம் வருகின்றன.
ரூ.999 ஐபோன் தருகிறோம், வாட்ஸ்அப் செயலியை பல கலர்களில் மாற்றி பயன்படுத்தலாம் என்றெல்லாம் கூறி சில போலி செயலிகளின் லிங்க்குகளை பகிர்கின்றனர்.
இன்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.
இந்த ஆப்பை தரவிறக்கம் செய்தால், எங்கு சென்றாலும் இலவச 3G சேவை கிடைக்கும் என்று கூறும் சில பார்வர்டுகள்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் 99% ஆஃபர்கள் தருவதாக சில விளம்பரங்கள் லிங்க் மூலம் பகிரப்படுகின்றன.
இதுபோன்ற லிங்குகளை திறக்கும் போது, அதன்மூலம் போலி இணையதளங்களுக்கு நம்மை கொண்டு சென்று, தகவல்கள் திருடும் முயற்சிகள் நடத்தப்படுகின்றன.
அதனால், இவற்றையோ அல்லது இதுபோன்ற நம்பமுடியாத ஆஃபர்களை பார்த்தால் அதை ஃபார்வர்டு செய்யாமல் போவது உங்கள் மொபைலுக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கும் நல்லது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.