பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - TNTJ அறிவிப்பு



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலாளர் நெல்லை பைசல், ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தற்போது தமிழகமும் சேர்ந்துள்ளது.

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு செயல்பட்டுள்ள இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சிலரின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

பா.ஜனதா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பால் உள்நாட்டு சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக உரிமைக்கு பாதகமளிக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டுள்ளது.

நீட் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தமிழக மாணவ, மாணவிகளை பாதிக்கும் வகையிலேயே பா.ஜனதா அரசின் செயல்பாடு அமைந்திருந்தது. பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிகழ்வுகளே நடந்துள்ளன.

வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குறிப்பு:
கடந்த நாடாளுமன்றம் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் முதலில் அதிமுக- விற்கு தனது ஆதரவை தெரிவித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.ஆனால் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசுகையில், பாஜகவை விமர்சிக்காமல் பேசி வந்ததால் அதிருப்தி அடைந்து அதிமுகவுக்கு தனது ஆதரவை தவ்ஹீத் ஜமாத் விலக்கிக் கொண்டது.

இந்த நிலையில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை திருச்சியில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

செயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும், மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

சிதம்பரத்தில் திருமாவுக்கு ஆதரவையும் சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது.

தென்காசியில் புதிய தமிழகம் தென்காசி தொகுதியில், புதிய தமிழகம் கட்சியையும் அது ஆதரித்தது.

3 தொகுதிகளில் காங்கிரஸுக்கு ஆதரவு மயிலாடுதுறை , தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியையும் அது ஆதரித்தது.

மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு நிபந்தனையுடன் ஆதரித்தது.

Post a Comment

0 Comments