ஆசிய கோப்பை தகுதிச்சுற்று கிரிக்கெட் - சவூதி அணியில் கோபாலபட்டினத்தை சேர்ந்த வீரர் தேர்வு!



ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஏசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான அணியை சவூதி கிரிக்கெட் மையம் அறிவித்துள்ளது.

அதில்  கோபாலபட்டினத்தைச் சேர்ந்த முஹமது நயீம்   இடம் பெற்றுள்ளார், அவர் கடந்த முறை தாய்லாந்தில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றிலும் விளையாடியிருந்தார்.

ஐக்கிய அமீரகத்தின் துபாய் பன்னாட்டு விளையாட்டரங்கம், ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கம், அஜ்மன் ஈடன் கார்டன் விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் குரூப்  A வில் சவூதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளும் குரூப் B யில் ஓமன், கத்தார், மாலத்தீவு, குவைத் ஆகிய நாடுகளும் விளையாடுகின்றன.

இப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26- ஆம் தேதி தொடங்கி  மே 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஜீலை மாதம் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றிற்கு எதிராக விளையாட தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மண்ணின் மைந்தன் முஹமது நயீம் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கும், சவூதிஅரேபியாவிற்கும் பெருமைகளைச் சேர்க்க கோபாலப்பட்டினம் இணையதளம்  GPM மீடியா குழுமம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments