புதுகை அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்!



புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது.புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ.  தமிழ், வரலாறு, வணிகவியல், ஆங்கிலம் மற்றும் பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல்,  வேதியியல், தாவரவியல், விலங்கியல், பி.பி.ஏ. உள்ளிட்ட இளங்கலை  பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை முதல் பிளஸ்2 முடித்த  ஏராளமான மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் புதுக்கோட்டையில் உள்ள அரசு  மகளிர் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதனால்  கல்லூரியில் மாணவிகள் குவிந்தனர். ஒரு மாணவிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே  வழங்கப்பட்டது.

விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி மாணவிகள் பெற்று சென்றனர்.  கல்லூரியில் வருகிற மே மாதம் 6ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும்  விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற மே  மாதம் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்து  உள்ளது.

Post a Comment

0 Comments