கோட்டைப்பட்டிணத்தில் ஏழை சிறுவர்களுக்கு 20/04/2019 இலவச கத்னா (சுன்னத்) முகாம்



அஸ்ஸலாமு அலைக்கும் (வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ) அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே வரக்கூடிய 20/04/2019 (சனிக்கிழமை) அன்று கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) மற்றும் த.மு.மு.க மருத்துவ சேவை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு ஏழை எளிய சிறுவர்களுக்கான இலவச கத்னா (சுன்னத்) முகாம் கோட்டைப்பட்டினம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் காலை 7.00 மணியளவில் நடைபெற உள்ளது.

அதுசமயம் இந்த முகாமில் கத்னா (சுன்னத்) செய்வதற்கான செலவு கட்டணம், விசிறி, பழங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிறுவர்கள் கத்னா (சுன்னத்) செய்த பிறகு அவர்களின் வீடுகளுக்கு செல்ல இலவச வாகன வசதி உண்டு.

இந்த அரிய வாய்ப்பினை சுற்றுவட்டார ஏழை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பு: 
1.அவசியம் முன்பதிவு செய்துகொள்ளவும்.
2.முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ளமுடியும்.
3.முன்பதிவு கடைசி நாள்: 15/04/2019

முன்பதிவு செய்ய உடனே தொடர்பு கொள்ளவும்:

A.சரீப் அப்துல்லா (ஜமாத் செயலாளர்) - 99424-41004

MSK.சாலிகு (சிங்கப்பூர் ஷாப்பிங்) - 99650-88902

இப்படிக்கு
முஸ்லீம் ஜமாத் நிர்வாகம் (வக்ஃபு)
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
கோட்டைப்பட்டினம்

தகவல்:
உற்று நோக்கு செய்திகள்
கோட்டைப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்




Post a Comment

0 Comments