கோபாலப்பட்டினத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது!!!



கோபாலப்பட்டினம் மைதாங்கரை இறுதிவீடு வாட்ஸ்அப் குழுமம் சார்பில், பெண்களுக்கான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் 13/04/2019 சனிக்கிழமை MKR ராசி திருமண மஹாலில் காலை 10.00 மணியளவில் துவங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு அதன்பிறகு M.ஜெஸீரா அவர்கள் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து ஆலிமா.S.நஜ்மா M.A.,(Eng) M.A., (Arab) அவர்கள் பெண்களின் வாழ்வில் கல்வியின் அவசியம் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார்.

மநோதத்துவ நிபுணர் சகோதரி திருமதி. ரேகா பத்மநாபன் அவர்கள் தற்பொழுது சமுதாயத்தில் நடைபெறும் பாலியல் தீண்டலிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பாலியல்  தீண்டலிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பெண் கல்வியின் முன்னேற்றம், பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய துறைகள் மற்றும் மனநலம் சார்ந்த விஷயங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி பெண்களிடம் விரிவான முறையில் கலந்துரையாடினார். மேலும் இந்நிகழ்ச்சி பற்றி மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ரேகா பத்மநாபன் அவர்கள் பதிலளித்தார். இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.










இந்நிகழ்ச்சியில் சுமார் 850-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஆலோசனை வழங்கி இறுதி வரை எங்களோடு உறுதுனையாக இருந்த பாப்புலர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் முகம்மது யூசுப் அவர்களுக்கும், ஏம்பக்கோட்டையை சேர்ந்த ஜபாருல்லாஹ் கான் அவர்களுக்கும், இட வசதி செய்து கொடுத்த முகம்மது மீராசா அவர்களுக்கும், வாகனம் வசதி ஏற்பாடு செய்து கொடுத்த ஏம்பக்கோட்டை ஜனப்பிரியா ஜாஹிர் அவர்களுக்கும்,பாப்புலர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் முகம்மது யூசுப் அவர்களுக்கும், சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் K.M.M. சேகுதாவூது அவர்களுக்கும், மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய தகவல்களை ஒவ்வொன்றையும் உடனுக்குடன் வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து மாபெரும் பங்காற்றிய GPM மீடியா குழுமத்திற்கும் மற்றும் உடல் உழைப்பு,பொருள் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மைதாங்கரை இறுதிவீடு சார்பாக கோபாலப்பட்டினம் இணையதளம் மூலம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களை இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னராக தேர்வு செய்து பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு GPM மீடியா சார்பாக மைதாங்கரை இறுதிவீடு வாட்ஸ்அப் குழுமம் மற்றும் சகோதரர் இம்ரான்கான் மேலும் எங்களுக்கு விளம்பர ஆடியோ பதிவு செய்து கொடுத்த சகோதரர் அசார் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: மைதாங்கரை இறுதிவீடு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் சமூக இணையப்பக்கத்தை Like, Follow மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்






Post a Comment

0 Comments