கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (பெண்கள்) ஆங்கில வழிக் கல்வி சேர்க்கை 2019-2020



தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க பட்டு வருகின்றன. இந்த நிலையில்  கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (பெண்கள்) 2019-2020 ஆண்டுக்கான ஆங்கில வழிக்கல்வி சேர்க்கை நடைபெறுகிறது.


பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:

அனைவருக்கும் இலவச கல்வி.

காற்றோட்டமான வகுப்பறைச்சூழல்.

தகுதி வாய்ந்த அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள்.

கற்றல் கற்பித்தலில் புதிய தொழில்நுட்பம் [கணினி, தொலைக்காட்சி, வழியாக கற்பித்தல்]

கணினி,நூலகம்,யோகா,ஓவியம், விளையாட்டு பயிற்சிகள்.

சரிவிகித உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள்.

அரசு வழங்கும் 14 வகையான விலையில்லா பொருள்கள்.

பெண் கல்வி ஊக்கத்தொகை சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை.

பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு.

மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர ஆண்டுவிழா, இலக்கியமன்ற விழா, விளையாட்டு விழா.

மாதந்தோறும் மன்ற செயல்பாடுகள்/ தனித்திறன் போட்டிகள்.

மாலை நேர அரபி சிறப்பு வகுப்பு

மேற்கண்ட சிறப்பு அம்சங்கள் நிறைந்த சங்கத்து ஆலமரம் பெண்கள் தொடக்கப் பள்ளியில் இன்றே தங்களது பெண் குழந்தைகளை சேர்த்து எதிர்காலத்திற்கு வேண்டிய தரமான கல்வியை முற்றிலும் இலவசமாக பெற்றிட அன்புடன் அழைக்கின்றேன்.


தகவல்:

ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
மணமேல்குடி ஒன்றிய இணைச் செயலாளரர் (அம்மா பேரவை),
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு)நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்,

Post a Comment

0 Comments