புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி



புதுக்கோட்டை மாவட்டத்தில் 167 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் நேற்று வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. 103 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. 18 பகுதிநேர அரசு உதவிபெறும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 பள்ளிகளும், 46 தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் 28 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.

தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரம் வருமாறு:-

103 அரசு பள்ளிகளில் கீரமங்கலம், அம்மாப்பட்டினம், திருமயம், சந்தைப்பேட்டை ஆகிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டையூர், ஆலவயல், புலியூர், சூரியூர், தாஞ்சூர், கல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய 12 பள்ளிகள் மட்டுமே 100 சத வீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பகுதிநேர அரசு உதவி பெறும் பள்ளிகளில் தச்சங்குறிச்சி செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, பாண்டிபத்திரம் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரபிக் மேல்நிலைப்பள்ளி, கோனாப்பட்டு ஸ்ரீசரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை திருவேங்கைவாசல் எஸ்.ஆர்.கே.வி. மேல்நிலைப்பள்ளி, வீச்சூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை பேராங்குளம் தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நச்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.

புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கைக்குறிச்சி ஏ.டி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளத்தூர் முத்துசுவாமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி அமலா அன்னை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, ஆலங்குடி மார்டன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி கோவில்வயல் அமிர்த வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை சிவபுரம் கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் குன்னத்தூர் செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வலையப்பட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, புதுக்கோட்டை குத்தூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் எம்.எச். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி செலக்‌ஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ் வரா மெட் ரிக் மேல் நிலைப்பள்ளி, வெள்ளக்குளம் தூய இக்னேஸ்சியஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமயம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி சேக் பாத்திமா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமயம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொன்ன மராவதி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னவாசல் இன்பெண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாத்தூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 28 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.

Post a Comment

0 Comments