கோபாலப்பட்டினத்தில் சாலையை ஆக்கிரமித்த குப்பைகள்,வழியை ஏற்படுத்துமா ஊராட்சி நிர்வாகம்…!



புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தின் முக்கிய நுழைவாயிலில் ஒன்று காட்டுக்குளம் பள்ளிவாசல் வரும் சாலையாகும். இந்த சாலையானது அதிக மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது.

இந்நிலையில் அந்த சாலை முழுவதும் குப்பைகள், கழிவுகள், காய்கறி கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகள் போடப்பட்டுள்ளன. சாலை முழுவதும் பரவி கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளால் அந்த சாலையே காணாமல் போய்விட்டது.



குப்பென வீசும் துர்நாற்றத்தால் அந்த சாலை வழியே பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.மேலும் இப்பிரச்சனை சில மாதங்களாக நீடித்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பள்ளி மாணவிகளும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவ்விஷயத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோரிக்கையை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக முபாரக் 

Post a Comment

0 Comments