தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் செய்ய கூடாதவை: ஆணையம் பட்டியல்



தேர்தல் காலங்களில் வேட்பாளர் செய்யக் கூடாதவை குறித்து தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் தற்போது படிப்படியாக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் வேட்பாளர்கள் செய்யக்கூடாதவை குறித்து தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அவற்றின் விவரங்களாவது, 

ஒரு வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ மற்றொரு வேட்பாளரை போட்டியிடாமல் விலகுமாறு வலியுறுத்தக் கூடாது. 

அதுபோல் வாக்காளர்களையும் வாக்களிக்கவும், வாக்களிக்காமல் இருக்கவும் நிர்பந்திக்க கூடாது. 

வாக்குசேகரிக்க மதச்சார்புடைய சின்னங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தக் கூடாது. 

அதுபோல் சமூக மற்றும் சாதி உணர்வுகளை தூண்டி வாக்குசேகரிப்பில் ஈடுபடக் கூடாது. சாதி, மதம், மொழி மற்றும் இன அடிப்படையில் இரு தரப்பினரிடையே கசப்புணர்வை ஏற்படுத்த வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. 

பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட குணநலன் மற்றும் நடத்தை குறித்து விமர்சிக்கக் கூடாது. 

வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லவும், திரும்பவும் வாகனங்கள் ஏற்பாடு செய்து தரக்கூடாது.

தேர்தல் செலவின உச்சவரம்புகளை மீறும் வகையில் செயல்பட கூடாது. 

வேட்பாளருக்கு ஆதரவாகவோ, வாக்காளர்களை கவரும் வகையிலோ அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்த கூடாது. 

வாக்குப்பதிவிற்கு முந்தைய 2 நாட்கள் மற்றும் வாக்குப்பதிவு நாட்களில் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த கூடாது. 

பிற வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் முகாம் அமைப்பது கூடாது. 

வாக்குச்சாவடியை தவறான வழியில் கைப்பற்ற கூடாது. 

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆள்மாறாட்டத்தை ஊக்குவிக்க கூடாது. 

வாக்குப்பதிவிற்கு முதல்நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மது விநியோகம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விநியோகிக்க கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments