மணமேல்குடியில் கடல் பசுக்களை காக்க விழிப்புணர்வு கூட்டம்



புதுக்கோட்டை மாவட்ட  வனத் துறை சார்பில்  கடல் பசுக்களைப் பாதுகாப்பது குறித்த  விழிப்புணர்வுக் கூட்டம் மணமேல்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி வனச்சரக அலுவலர் ராஜசேகரன் தலைமை வகித்தார். கடல் பசு  விழிப்புணர்வு அலுவலர் பாலாஜி பேசுகையில், ஆவுரியா என அழைக்கப்படும்  கடல் பசுக்களைப் பாதுகாக்க கடல் தழைகளை செயற்கையாக வளர்ப்பது, கடல் பசுக்கள் கரையில் ஒதுங்கும்போது அவற்றை பாதுகாத்து  மீண்டும் கடலில் விடுவது குறித்து விளக்கினார்.

மேலும்  கடல் பசுவை  மீனவர்கள் மூலம் பாதுகாப்பது குறித்தும், கடல்  பசுக்கள் வலையில் சிக்கினால்  வனத் துறைக்கு தெரிவித்து மீட்பது குறித்தும்  விளக்கப்பட்டது. மேலும் இந்திய வனவிலங்கு சட்டப்படி   பாதுகாக்கப்பட்ட  உயிரினங்கள் பட்டியலில் கடல் பசு சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் வனத்துறை அலுவலர்கள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments