புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 இடங்களில் நாளை நடக்கிறது






புதுக்கோட்டை மாவட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 6 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாநகராட்சி, 5 மற்றும் 6 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு திருக்கோகர்ணம், கோவில்பட்டி சமுதாயக்கூடத்திலும், அறந்தாங்கி நகராட்சி, 3, 4 மற்றும் 5 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ராஜேஸ்வரி மகாலிலும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு சிவன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திலும் நடைபெற உள்ளது.

இதேபோல பொன்னமராவதி - 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு காரையூர் ஸ்ரீ குரு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும், ஆவுடையார்கோவில் - 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமானேந்தல் பாலகிருஷ்ணன் மகாலிலும், விராலிமலை - 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கல்குடி ஊராட்சி, கிராம சேவை மையக் கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments