கோட்டைபட்டினத்தில் இலவச கத்னா முகாம்



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில்  புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தமுமுக மருத்துவ அணி மற்றும் கோட்டைப்பட்டினம் முஸ்லீம் ஜமாத்  ( வக்பு ) இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு ஏழை எளிய சிறுவர்களுக்கான இலவச கத்னா (சுன்னத்) முகாம் கோட்டைப்பட்டினம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் காலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் MSK.சாலிகு தலைமை தாங்கினார்.

கோட்டைப்பட்டினம் ஜமாத் தலைவர் K.S முகம்மது காசிம் , முன்னாள் ஜமாத் தலைவர் MPS.பாரூக் , ஜமாத் செயலாளர் சரிப் அப்துல்லாஹ், ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் அஜ்மல் கான், ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் அப்துல் சுக்கூர், கோட்டைப்பட்டினம் கிளை தலைவர் செட்டி (எ) ஹாஜா முகைதீன் , கோபாலப்பட்டினம் கிளை தலைவர் முகமது மசூது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மேலும் கோட்டைபட்டினம் பொதுமக்கள், இளைஞர்களும் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



இந்நிகழ்வில்  21 சிறுவர்களுக்கு இலவச கத்னா ( சுன்னத்) செய்யப்பட்டது.
குறிப்பாக இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த 10 சிறுவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

குழந்தைகளுக்கு பழங்கள், துண்டு, விசிறி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இறுதியாக இதற்காக பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் , உடல் உழைப்பு செய்தவர்களுக்கும் நன்றி கூறப்பட்டது.
 
தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக அப்துல் சுக்கூர்

Post a Comment

0 Comments