புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி இறந்தார். இருவர் படுகாயமடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் மகன் விஜய் (28). வெளிநாட்டில் வேலைபார்த்துவந்த இவர் கடந்த 10 நாள்களுக்கு முன் விடுமுறையில் வந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளீஸ்வரன் மகன் அனுசீலன் (26), கிருஷ்ணன் மகன் உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் பைக்கில் கட்டுமாவடி அடுத்த வல்லவன்பட்டினம் பகுதியில் நடந்த திருவிழாவுக்குச் சென்றார்.
கண்டனிவயல் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரியுடன், பைக் மோதியதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அனுசீலன், உன்னிகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மணமேல்குடி போலீஸார் சடலத்தைஅறந்தாங்கி மருத்துவமனை அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.