புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனாதி கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ கடல் மண்புழுக்கள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
ஏனாதி கிராமத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் மண்புழுக்களை சிலர் எடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பா. ரகுபதி, தலைமைக் காவலர் பா. ராதாகிருஷ்ணன், மற்றும் முதல் நிலைக் காவலர் கோ. ரெங்கநாதன் உள்ளிட்டோர் அரசரங்கரை சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அவ் வழியே வந்த டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ கடல் மண்புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தையும், அதில் இருந்த 12 பேரையும் மேல் நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனத்துறை வனவர் என். ஷமீர் அஹமது வசம் ஒப்படைத்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.