புதுக்கோட்டையில் ஆம்மினி பேருந்துகளுக்கு தனியே பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த 1981ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பெருகி வரும் சாலை போக்குவரத்து தனியார், அரசு பேருந்துகளின் இயக்கம் அதிகரித்தது. இதனால் இந்த பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் அதிகரித்துவிட்டது.
இதனால் பேருந்து நிலையத்துக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளே நுழையும் பேருந்துகள் மிகவும் தாமதமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பேருந்து நிலையத்தின் தரைப்பகுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவை சிதிலமடைந்தன. அதில், கான்கிரீட் தரைத்தளம் குண்டும் குழியுமாக மாறியது. இட நெருக்கடி மற்றும் சேதங்களால் பொதுமக்களும் பயணிகளும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல காலகட்டங்களில் கோடிக்காணக்கான ரூபாய் செலவு செய்து புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. சில நேரங்கள் மராமத்து பணிகளும் நடைபெற்றது.
இந்த சூழலில், புதுக்கோட்டையிலிருந்து 200-க்கும் மேற்பட்ட புற நகர் பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு இயங்கி வருகின்றன. திருச்சி விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிறகு சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, ராமநாதபுரம் ஆகிய பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர்கள் திருச்சி விமானநிலையத்தை தேர்வு செய்கின்றனர்.
இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 40க்கும் மேல்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னைக்கும், சில பேருந்துகள் பெங்களூர், கோவைக்கும் புதுக்கோட்டை வழியாக சென்று வருகின்றன. மேலும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, மீமிசல், பொன்னமராவதி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் தினமும் 10 ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு சென்று வருகின்றனர்.
இதன் மூலம் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வளவு எண்ணிக்கையில் நெடுந்தொலைவு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் வசதி இல்லாத காரணத்தால் புதுகை நகரில் இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரை இப்பேருந்துகளில் செல்லும் பயணிகள் பழைய அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தில் மேல்புறத்திலுள்ள சாலை, அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலை, உழவர் சந்தை சாலை போன்ற வெவ்வேறு இடங்களுக்கு சென்று சிரமப்படும் நிலை தொடர்கிறது. இரவு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் பெண் பயணிகளை இறக்கிவிடுவதால் அவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பேருந்துகளுக்கு தன் உறவினர்களை வாகனங்களில் அழைத்து வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடம்மில்லாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மக்கள் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்லவும், திருச்சி விமானநிலையத்திற்கு செல்லவும் ஆம்னி பேருந்து பயணத்தை அதிகம் தேர்வு செய்கின்றனர். இந்த பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை நகருக்கு வந்து செல்கின்றன. மேலும் புதுக்கோட்டையில் இருந்தும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கு என திருச்சி போல தனியே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்திற்கு உறவினர்களை விட வருவோர்கிளின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஊராட்சி அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் நிறுத்த இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.