தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தினந்தினம் குடிநீர் கேட்டு மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டுக்குடி நீர்த் திட்டம் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் இருந்தாலும், மக்களின் குடிநீர்த் தேவையைப் போக்க முடியாத அவலநிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர். புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாகக் குடிநீருக்காக நீண்டதூரம் நடந்துசென்று, ஊற்று தோண்டி குடிநீர் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே 3 கி.மீ தொலைவில் இருக்கிறது ஆர்.புதுப்பட்டினம் கிராமம். கடற்கரை கிராமமான இங்கு, 200-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களும் வசிக்கின்றன.
ஆர்.புதுப்பட்டினத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், கடற்கரையையொட்டி சில ஏக்கர் பரப்பளவில் மணல் திட்டுகள் உள்ளன. அந்தப் பகுதிக்குத்தான் பெண்கள் வீட்டிலிருந்து காலிக்குடங்களுடன் நடைப்பயணம் செல்கின்றனர். அங்கு சென்றவுடன், 'ஆர்.புதுப்பட்டினம் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட பகுதி' என்று போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே சென்று காலிக்குடங்களை வரிசையாக அடுக்கிவைக்கின்றனர். பின்பு, அங்குள்ள மணல் திட்டில் பள்ளம் தோண்ட ஆரம்பிக்கின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள கிராமம்
அனைவருமாகச் சேர்ந்து 3 முதல் 5 அடி வரையிலும் பள்ளம் தோண்டுகின்றனர். 3 அடிக்கு மேல் தோண்டும்போது தண்ணீர் ஊற ஆரம்பிக்கிறது. 4 அடிக்குச் செல்லும்போது தெளிவான தண்ணீர் கிடைக்கிறது. கிடைக்கும் ஊற்று நீரை அகப்பையைக் கொண்டு வடிகட்டி குடங்களில் சேகரிக்கின்றனர். ஒவ்வொருவராக நீண்ட நேரம் வரையிலும் காத்திருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு நடைப்பயணமாக வீட்டுக்குத் திரும்புகின்றனர். வயதான பாட்டி முதல் இளம்வயது பெண்கள் வரையிலும் அனைத்துத் தரப்பினரும் தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். "உடலுக்கு ஆரோக்கியமான குடிநீரை எடுப்பதற்காக, எவ்வளவு மைல் தூரம் வந்தாலும் எங்களுக்குச் சுமை பெரிதாகத் தெரியாது" என்கின்றனர், அவ்வூர் பெண்கள்.
ஆர்.புதுப்பட்டிணம் பெண்கள்
இதுகுறித்து அந்தக் கிராம பெண்களிடம் பேசினோம், "பக்கத்திலேயே கடல். இரண்டு பக்கமும் ஆறு. நடுவில்தான் மணல் திட்டுகள் இருக்கு. இங்குதான் சுத்தமான தண்ணீர் எங்களுக்குக் கிடைக்கிறது. இதைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகிறோம். முன்பெல்லாம் 2 அடி ஆழத்துக்கு மண்ணைத் தோண்டினால் போதும், தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிடும். ஆனால், இப்போது 5 அடி வரையிலும் தோண்ட வேண்டி இருக்கிறது. அந்தளவுக்கு வறட்சி வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது. சில நேரம் 5 அடி வரையிலும் தோண்டினாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் கிடைக்காமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. குடிநீர் எடுக்க வந்தால், நேரம் காலம் எதையும் பார்க்க மாட்டோம். எவ்வளவு நேரமானாலும் குடிநீர், அவசியத் தேவை என்பதால் காத்திருந்து எடுத்துச் செல்கிறோம்.
குடிநீர்
பலரும் வீட்டில் சமைப்பதற்கு இந்த நீரைத்தான் பயன்படுத்துகிறோம். இந்தச் சுத்தமான ஊற்றுத் தண்ணீரைக் குடிப்பதால், எந்த நோய்களும் எங்களை அண்டுவதில்லை. நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்கிறோம். 2 கி.மீ வேகாத வெயிலில் நடந்துசென்று, ஓர் அகப்பை ஊற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டால் போதும், நடந்து வந்த களைப்பு எல்லாம் நீங்கிவிடும். எல்லா ஊர்லயும் மினரல் வாட்டர் கேன்களை விற்பனைக்குக் கொண்டுசெல்கின்றனர். எங்கள் ஊருக்கும் குடம் ரூ.10 என்று மினரல் வாட்டர் கொண்டு வருவார்கள். ஆனால், பெரும்பாலும் நாங்கள் யாரும் வாங்க மாட்டோம். எவ்வளவு சிரமம் இருந்தாலும், தண்ணீர் எடுக்கப் போகாமல் இருக்க மாட்டோம்.
குடிநீர் எடுத்துச் செல்லும் ஆர்.புதுப்பட்டிணம் பெண்கள்
குடிநீருக்காக, அந்தப் பகுதியை ஒதுக்கியதுதான் மாவட்ட நிர்வாகம் எங்களுக்குச் செய்த பெரிய உதவி. ஆனாலும், நாங்கள் ஊற்றுத் தண்ணீர் எடுக்கும் பகுதிக்கு அருகிலேயே இறால் பண்ணை அமையவுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். இறால் பண்ணை அமைக்கப்பட்டால், நிச்சயம் தெளிவான இந்தத் தண்ணீர் பாழடையவும் வாய்ப்புள்ளது. எனவே, இங்கு அது அமைய விடக்கூடாது. சுத்தமாகக் கிடைத்துவரும் ஊற்றுத் தண்ணீரைப் பாழடைய விடாமல் பாதுகாக்க வேண்டும். சுற்றிலும் வேலி அமைப்பதுடன், அடிப்படை வசதிகளை அமைத்துத் தந்தால் போதும்" என்கின்றனர்.
நன்றி: விகடன்
கூட்டுக்குடி நீர்த் திட்டம் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் இருந்தாலும், மக்களின் குடிநீர்த் தேவையைப் போக்க முடியாத அவலநிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர். புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாகக் குடிநீருக்காக நீண்டதூரம் நடந்துசென்று, ஊற்று தோண்டி குடிநீர் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே 3 கி.மீ தொலைவில் இருக்கிறது ஆர்.புதுப்பட்டினம் கிராமம். கடற்கரை கிராமமான இங்கு, 200-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களும் வசிக்கின்றன.
ஆர்.புதுப்பட்டினத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், கடற்கரையையொட்டி சில ஏக்கர் பரப்பளவில் மணல் திட்டுகள் உள்ளன. அந்தப் பகுதிக்குத்தான் பெண்கள் வீட்டிலிருந்து காலிக்குடங்களுடன் நடைப்பயணம் செல்கின்றனர். அங்கு சென்றவுடன், 'ஆர்.புதுப்பட்டினம் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட பகுதி' என்று போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே சென்று காலிக்குடங்களை வரிசையாக அடுக்கிவைக்கின்றனர். பின்பு, அங்குள்ள மணல் திட்டில் பள்ளம் தோண்ட ஆரம்பிக்கின்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள கிராமம்
அனைவருமாகச் சேர்ந்து 3 முதல் 5 அடி வரையிலும் பள்ளம் தோண்டுகின்றனர். 3 அடிக்கு மேல் தோண்டும்போது தண்ணீர் ஊற ஆரம்பிக்கிறது. 4 அடிக்குச் செல்லும்போது தெளிவான தண்ணீர் கிடைக்கிறது. கிடைக்கும் ஊற்று நீரை அகப்பையைக் கொண்டு வடிகட்டி குடங்களில் சேகரிக்கின்றனர். ஒவ்வொருவராக நீண்ட நேரம் வரையிலும் காத்திருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு நடைப்பயணமாக வீட்டுக்குத் திரும்புகின்றனர். வயதான பாட்டி முதல் இளம்வயது பெண்கள் வரையிலும் அனைத்துத் தரப்பினரும் தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். "உடலுக்கு ஆரோக்கியமான குடிநீரை எடுப்பதற்காக, எவ்வளவு மைல் தூரம் வந்தாலும் எங்களுக்குச் சுமை பெரிதாகத் தெரியாது" என்கின்றனர், அவ்வூர் பெண்கள்.
ஆர்.புதுப்பட்டிணம் பெண்கள்
குடிநீர்
பலரும் வீட்டில் சமைப்பதற்கு இந்த நீரைத்தான் பயன்படுத்துகிறோம். இந்தச் சுத்தமான ஊற்றுத் தண்ணீரைக் குடிப்பதால், எந்த நோய்களும் எங்களை அண்டுவதில்லை. நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்கிறோம். 2 கி.மீ வேகாத வெயிலில் நடந்துசென்று, ஓர் அகப்பை ஊற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டால் போதும், நடந்து வந்த களைப்பு எல்லாம் நீங்கிவிடும். எல்லா ஊர்லயும் மினரல் வாட்டர் கேன்களை விற்பனைக்குக் கொண்டுசெல்கின்றனர். எங்கள் ஊருக்கும் குடம் ரூ.10 என்று மினரல் வாட்டர் கொண்டு வருவார்கள். ஆனால், பெரும்பாலும் நாங்கள் யாரும் வாங்க மாட்டோம். எவ்வளவு சிரமம் இருந்தாலும், தண்ணீர் எடுக்கப் போகாமல் இருக்க மாட்டோம்.
குடிநீர் எடுத்துச் செல்லும் ஆர்.புதுப்பட்டிணம் பெண்கள்
குடிநீருக்காக, அந்தப் பகுதியை ஒதுக்கியதுதான் மாவட்ட நிர்வாகம் எங்களுக்குச் செய்த பெரிய உதவி. ஆனாலும், நாங்கள் ஊற்றுத் தண்ணீர் எடுக்கும் பகுதிக்கு அருகிலேயே இறால் பண்ணை அமையவுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். இறால் பண்ணை அமைக்கப்பட்டால், நிச்சயம் தெளிவான இந்தத் தண்ணீர் பாழடையவும் வாய்ப்புள்ளது. எனவே, இங்கு அது அமைய விடக்கூடாது. சுத்தமாகக் கிடைத்துவரும் ஊற்றுத் தண்ணீரைப் பாழடைய விடாமல் பாதுகாக்க வேண்டும். சுற்றிலும் வேலி அமைப்பதுடன், அடிப்படை வசதிகளை அமைத்துத் தந்தால் போதும்" என்கின்றனர்.
நன்றி: விகடன்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.