புதுக்கோட்டை மாவட்ட அளவில் விளையாட்டு கோடைகால பயிற்சி முகாம் நாளை மே 2ம்தேதி தொடக்கம்…



புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் விளையாட்டுத்துறையின் சார்பில் வரும் 2ம் தேதி முதல் தொடங்கி வரும் 22ம் தேதி வரை 20 நாட்கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.


இதில் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சியும், மாணவர்களுக்கு மட்டும் கால்பந்து போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி, சிற்றுண்டி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

விருப்பமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது பெயரினை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அதிகாரியிடம்பதிவு செய்து கொள்வதுடன், வரும் 2ம் தேதி காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments