கோபாலப்பட்டினத்தில் மின்கம்பத்தில் டிராக்டர் மோதி விபத்து



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில் நேற்று 07/05/2019 இரவு மக்கா 3-வது தெருவில் ஒரு வீட்டிற்கு டிராக்டரில் அதன் டிரைவர் தண்ணீர் இறக்கிக்கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் டிராக்டரில் அதன் டிரைவர் சாவியை வண்டியிலேயே வைத்துவிட்டார். இதனை அறிந்த அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் விளையாட்டாக டிராக்டரில் ஏறி அதை இயக்கியதில் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பத்தில் தீப்பொறி பறந்தது. இதில் மின்கம்பம் சாய்ந்தது.விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய அலுவலர்கள் வந்து டிராக்டர் மோதி மின்கம்பம் சாய்ந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : வாசிம் கான்



Post a Comment

0 Comments