சவூதியில் விபத்தில் சிக்கிய சிலம்பரசனை தாயகம் வரை கொண்டு வந்த ரியாத் தமுமுக!!!



தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி  தாலுகா பாமணி கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் அவர்களின் மகன் சிலம்பரசன் சவுதி அரேபியா - ரியாத்தில் உள்ள தனியார் Transportation கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட  வாகன விபத்தில் உடல்முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு இடது காலில் உலோகம் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நீரிழிவு நோய் இருந்ததால் காயம் ஆறாமல்  கஷ்டப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்பத்தார் அவரை எப்படியாவது தங்களிடம் ஒப்படைக்க வேண்டி இது போன்ற சமூக நல பணிகளை செய்து கொண்டு வரும் ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளை அணுகினார். அதன் அடிப்படையில் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள், மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்களை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

இந்த தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்கள் சிலம்பரசன் வேலை செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கஷ்டமான சூழ்நிலையில் மிகக் குறுகிய காலத்தில் அவரை மருத்துவமனையில் இருந்து மீட்டு நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் விமான டிக்கெட் பெற்று சவூதியா விமானம் மூலமாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி ரியாத் சமூக நலத்துறை நிர்வாகி சிலம்பரசனுடன் விமானத்தில் பயனித்து அவரை குடும்பத்தாரிடம் ஒப்படைத்து தஞ்சாவூர் KG மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அட்மிஷன் வரை கூட இருந்து உதவி செய்யப்பட்டது.

மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உரிய நேரத்தில் எனது மகனை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று அவரது தாயார் உணர்ச்சி பூர்வமாக நன்றி கூறினார்.

என்றென்றும் மனிதநேய பணியில் ;

தமிழ் தஃவா தமுமுக - மமக
சமூக நலத்துறை
மத்திய மண்டலம்
ரியாத் - சவுதி அரேபியா

Post a Comment

0 Comments