உலகிலேயே மிகவும் அதிகப்பட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகிலேயே அதிகபட்சமாக குவைத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை 145.4 டிகிரி வெயில் பதிவானது. ஆனால், பதிவான வெயிலைக் காட்டிலும் உணரப்பட்ட வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதனால் சாலைகளில் தார் உருகியநிலையில் காணப்பட்டது. மக்கள், வீடுகளில் முடங்கினர். போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. நிழலான இடங்களில் கூட கடுமையான வெப்பநிலை உணரப்பட்டது. சவுதி அரேபியாவில், அல் மஜ்மா என்ற இடத்தில் 131 டிகிரி வெப்பம் நிலவியது.
குவைத், சவுதியில் வரும் 21ம் தேதிதான் கோடைக்காலம் தொடங்குகிறது. அங்கு, கோடை முழுவதும் இதே வெப்பநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்சிலும் வெயில் கடுமையாக உள்ளது. எமிரேட்சில் பல இடங்களில் 118.4 டிகிரியும், ஈராக்கின் மேசன் பகுதியில் 132 டிகிரியும் வெப்பம் நிலவியது. இந்தாண்டு கோடைக்காலத்தில் வெயில் மிக கடுமையாக இருக்கும் என குவைத் வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். அடுத்த மாதம் வெயிலின் அளவு 154.4 டிகிரியை எட்டக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.