புதுகை மாவட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு லெக்டர் பி. உமாமகேஸ்வரி தகவல்



புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து காலியாக உள்ள இடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு, அமைப்பியல் துறையில் 6 இடங்களும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் ஓர் இடமும், மின்னியல் மற்றும் தொடர்பியல் துறையில்  7 இடங்களும், கணினி அறிவியல் துறையில் 19 இடங்களும் காலியாக உள்ளன.

இதற்கான சேர்க்கை வரும் ஜூன் 14ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 12 ஆகும்.

முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, அமைப்பியல் துறையில் 27 இடங்களும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 11 இடங்களும், கணினி அறிவியல் துறையில் 43 இடங்களும் காலியாக உள்ளன.

இதற்கான சேர்க்கை ஜூன் 29ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 28 ஆகும்.மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் தொலைபேசி எண்- 04322 275288-இல் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வுக்கு மாணவ, மாணவிகள் வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் மு.முகமது பாரூக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் அமைப்பியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிகல்), மின்னணு மற்றும் தொடர்பியல் (இ.சி.இ) கணிப்பொறியியல் (கம்யூட்டர் சயின்ஸ்) மற்றும் வணிகவியல் (காமர்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு முடித்த  மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  அப்போது உரிய  காலத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத மாணவர்கள்,  தற்சமயம் பயன்பெறும்  வகையில், தமிழக அரசின் சார்பாக துணைக் கலந்தாய்வு நடத்த தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அனுமதித்துள்ளார். ஆகவே ஏற்கனவே  முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத மாணவ, மாணவிகள் வரும் 28 -ம் தேதி மாலை வரை கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments