இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அரசநகரிப்பட்டினத்திற்கு வருகை



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மீமிசலை அடுத்த அரசநகரிப்பட்டினத்திற்கு 08/06/2019 அன்று மாலை 5.00 மணியளவில் சமூக சேவை மற்றும் மார்க்க சேவையில் சிறந்து விளங்கக்கூடிய வளர்பிறை நற்பணி மன்றத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வெற்றி வேட்பாளர் கா.நவாஸ் கனி  அவர்கள் வருகை தந்தார்கள்.


இந்நிகழ்வில் வளர்பிறை நற்பணி மன்றத்தின் பணியாளர் மற்றும் பொருளாளர் சிறப்பு வரவேற்பளித்தனர். மன்றத்தின் சார்பாகவும் மற்றும் ஊரின் சார்பாகவும் மன்றத்தின் பொருளாளர் N.S.M. கான் முஹம்மது அவர்கள் பொன்னாடை போர்த்தினார்கள். அதனை தொடர்ந்து வாய்மொழி வழியாக ஊருக்கு மின்கம்பம் விளக்கு அமைத்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனக்கு நேரடியாக கடிதம் தரும்படி கேட்டுக்கொண்டார்.

ஊரில் உள்ள அனைத்து இளைஞர்கள், பெரியோர்கள் மற்றும் தாய்மார்கள்  திரளாக வந்து நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி அவர்ளை  வரவேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக : ஆசிக் இக்பால், மன்றத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர்

Post a Comment

0 Comments