கோபாலப்பட்டினத்தில் மின் கம்பி அறுந்து விழுந்தது



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலபட்டினம் மக்கா மெயின் சாலையில் (வாத்தியார் அப்பா வீடு அருகில்) உள்ள மிகம்பம் கம்பி நேற்று 10/06/2019 திங்கள்கிழமை மதியம் சுமார் 1.45 மணியளவில் அறுந்து விழுந்தது.


சில நாட்களாவே கோபாலப்பட்டினத்தில் வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் மின் கம்பி அறுந்து விழும் நேரத்தில் அருகில் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்பு பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து மின்சார ஊழியர்கள் நிகழ்விடத்துக்கு வந்து மின் வயர்களை சரி செய்தனர்.

இதன் அடிப்படையில் கோபாலப்பட்டினம் பகுதியின் மின் ஊழியரிடம் கேட்டதற்கு ஒவ்வொரு மாடிவீட்டின் வழியாக செல்லக்கூடிய மின்வயரில் பிளாஸ்டிக் பைப் அமைக்கப்படுகிறது. எனவே அதன் எடை அதிகமாக இருப்பதால் இவ்வாறு அடிக்கடி நடைபெறுகிறது என்றார்.










மேலும் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது அதிகமான இடங்களில் பழைய மின் கம்பிகள் செல்வதால் இது போன்ற விபத்து நடைபெறுகிறது என்றும் பல இடங்களில், அந்த கம்பிகள் கீழே தொங்குகின்றன எனவும், மிகவும் எலும்பு கூடான நிலையில் சில மின்கம்பம் காட்சியளிப்பதாகவும் இதனால், மழை நேரத்தில், வேகமாக காற்று வீசும்போது, கம்பி அறுந்து விழுகிறது. சில இடங்களில், கனரக வாகனங்கள் மீது பட்டு, சேதமடைகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரா வாரியம் பழைய மின்கம்பிகளை மாற்றி அமைக்கப்படும் என்று உறுதி அளித்தது என்றும் ஆனால் அவை இன்று வரை மாற்றப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

இவை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்பது கோபாலப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0 Comments