தமிழகத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அன்றாட அத்தியாவசிய தண்ணீர் கூட கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்த இன்னல்கள் நீங்க படைத்த இறைவனிடம் மழை வேண்டி கோரிக்கை வைக்கும் சிறப்புப் பிரார்த்தனைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் கிளைகள் வாரியாக செய்துவருகின்றது. அதன் ஓர் அம்சமாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை (மழைத் தொழுகை) நேற்று முன்தினம் 20/06/2019 வியாழக்கிழமை அதிகாலை 6.30-க்கு நடத்தப்பட்டது.
இதில் கிளை தலைவர் அலி முஹம்மது, கிளை செயலாளர் அமீர் பாட்சா, கிளை பொருளாலர் சேக் அப்துல்லாஹ், கிளை துணை செயலாளர் குலாம் முஹம்மது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த மழை சிறப்பு பிராத்தனையை இமாம் நூர் முகம்மது நடத்தி வைத்தார்.
இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.
காவிரி நீரை தமிழகத்திற்கு தேவையான அளவு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசிற்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
குளம், ஏரி, கன்மாய் போன்ற நீர்நிலைகளை முறையாக தூர்வாரி மழைகாலங்களில் தண்ணீர் சேமிக்கும் வழிகளை எளிதாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தகவல்: பதூர்
இந்த இன்னல்கள் நீங்க படைத்த இறைவனிடம் மழை வேண்டி கோரிக்கை வைக்கும் சிறப்புப் பிரார்த்தனைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் கிளைகள் வாரியாக செய்துவருகின்றது. அதன் ஓர் அம்சமாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை (மழைத் தொழுகை) நேற்று முன்தினம் 20/06/2019 வியாழக்கிழமை அதிகாலை 6.30-க்கு நடத்தப்பட்டது.
இதில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.
காவிரி நீரை தமிழகத்திற்கு தேவையான அளவு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசிற்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.
குளம், ஏரி, கன்மாய் போன்ற நீர்நிலைகளை முறையாக தூர்வாரி மழைகாலங்களில் தண்ணீர் சேமிக்கும் வழிகளை எளிதாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
தகவல்: பதூர்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.