மீமிசலில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க பூமி பூஜை



புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த மீமிசலில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க பூமி பூஜை (17/06/2019) திங்கள்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதியின் தொகுதி நிதியின் கீழ் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க ரூ.15 லட்சமும், பேருந்துகள் வந்து செல்ல சுற்றுப்பாதை அமைக்க ரூ. 3 லட்சமும் என ஆக மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இரத்தினசபாபதி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments