கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானம் சுற்று வேலியை சேதப்படுத்திய சமூக விரோதிகள்



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆலமரம் அருகில் இருந்த கிரிக்கெட் மைதானத்தை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுற்றி கம்பி வேலி அமைத்து ஊர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஈத்கா மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகையும், பெண்களுக்கான பெருநாள் தோப்பும் நடைபெற்று வருகிறது. இந்த ஈத்கா மைதானம் பெருநாளைக்கு முன்னர்தான் சில சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து சில இடங்களில் முன்னர் சேதப்படுத்தப்பட்டிருந்த கம்பி வேலியை 25 கள்ளுக்கால் மற்றும் இரண்டு கம்பி ரோல் கொண்டு சரிசெய்தனர்.


ஆனால் இந்த ஈத்கா மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை இரண்டாவது பெருநாளான நேற்று 06/06/2019 இரவு சுமார் 7.30 மணியளவில் சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதோடு, அதில் இருந்த கள்ளுக்கால்களை உடைத்து போட்டு சென்றுள்ளனர். இது போன்ற இழிவான செயல்களை சில இளைஞர்கள் செய்வது வருந்தத்தக்க செயலாக உள்ளது.

 மேலும் கோபாலப்பட்டினத்தில் உள்ள அநேக இடங்களில் இது போன்ற சமூக விரோத போக்குகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஊர் மக்களின் குற்றசாற்றாகவும் மற்றும் கவலையாக உள்ளது.  நடை பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்களும், விளையாட வரும் மாணவர்களும்  பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ந்து வரும் கிராமங்களில் கோபாலப்பட்டினம் கிராமமும் ஒன்று.



பெருமைமிக்க இந்த ஈத்கா மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில விஷமிகள் வேண்டும் என்றே மரங்களையும் மற்றும் இரும்பு வேலியையும் உடைத்து போன்ற சில கீழ்தரமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பெருநாள் தோப்பிற்கு இளைஞர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் ஆத்திரமடைந்த விஷமிகள் சுற்று வேலியை உடைத்து கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இதுபோன்ற சமூக விரோதிகளை இனம் கண்டு அவர்களுக்கு தக்க தண்டனையை ஜமாத் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கு கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் ?

1.தண்டனையா 
2.சமரசமா 

நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என்ன தண்டனைகள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

புகைப்படம் உதவி: அல்லாபிச்சை

Post a Comment

0 Comments